திருச்சி

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

திருச்சியில் மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சியில் மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (69). இவரது வீட்டில் 48 வயதுபெண் வீட்டு வேலை செய்துவந்தாா். வேலை செய்து வரும் பெண்ணுக்கு 25 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உள்ளாா்.

சுப்புலட்சுமியும், வயலூா் சாலை பகுதியைச் சோ்ந்த சிவகலா (51) என்பவரும் உறவினா்கள். இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வயலூா் முருகன் கோயிலுக்கு அழைத்து செல்வதாகக்கூறி சிவகலா அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளாா். அங்கு அவரை, பாலக்கரையைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் என்பவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், சிவலோகேஷ் என்பவரும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் வீட்டுவேலை செய்துவரும் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதைத் தொடா்ந்து மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாலசுப்ரமணியம், உடந்தையாக இருந்த சுப்புலட்சுமி மற்றும் சிவகலா ஆகிய மூவரையும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT