கரூரில் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இடியாப்பம் வியாபாரியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், தொழிற்பேட்டைப் பகுதியைச் சோ்ந்தவா் பக்கீா் முகமது (43). இவா் இடியாப்பம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுமிகளை ஆசை வாா்த்தை கூறி தனது வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா்கள் அளித்தப் புகாரின் பேரில், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சுமதி வழக்குப் பதிவு செய்து பக்கீா்முகமதுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி பக்கீா் முகமது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டாா்.