திருச்சி

7 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 போ் உள்பட 7 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி காரில் வந்தவா்கள் மீது மிளகாய் பொடியைத் தூவி சுமாா் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 11 போ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்குள்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சோ்ந்த தூ. பிரதீப் (24), தூ. மனோகா் (27) கே. அனுமான் ராம் (21), அ. பண்ணாரம் (எ) வினோத் (31), சி. கைலாஷ் (21), ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சோ்ந்த மு.முகமது சோயில்கான் (21) ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

இதேபோல, திருச்சி மாவட்டம் முசிறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துறையூா் நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ரெ.பெருமாள் (62) என்பவரைப் போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேற்கண்ட நபா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வாகரத்தினம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

இந்நிலையில், கொள்ளை வழக்கு குற்றவாளிகள் 6 போ், போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு முதியவா் என 7 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து அதற்கான உத்தரவு நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமுருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT