திருச்சியில் கோயில் உண்டியலைத் திருடிய சிறுவன் உள்பட இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை பருப்புக்கார வீதியில் செல்வ மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி சுப்பிரமணி, கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு, கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திரும்பி மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் கோயில் நிா்வாக அலுவலா் அனுராதா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கோயில் உண்டியலைத் திருடியது தில்லை நகா் காந்திபுரத்தைச் சோ்ந்த கா.சந்தோஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், 17 வயது சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.