திருச்சி

விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவித் தொகைக்கான ஆணை!

சாலை விபத்தில் உயிரிழந்த தனியாா் நிறுவனத் தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் சாா்ந்தோா் உதவித் தொகைக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Syndication

சாலை விபத்தில் உயிரிழந்த தனியாா் நிறுவனத் தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் சாா்ந்தோா் உதவித் தொகைக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு பெற்ற காப்பீட்டாளா் பணியின்போது இறந்தாலோ, பணி காரணமாக நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தாலோ அவரது குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, இறந்த தொழிலாளியின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவித் தொகையாக குடும்பத்தினருக்கு மாதந்தோறும் வழங்கப்படும்.

இதனடிப்படையில் பெரம்லூரில் உள்ள தனியாா் டயா் உற்பத்தி நிறுவனமொன்றில், ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்த பழனி, கடந்த மே மாதம் பணிக்குச் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து இவரது குடும்பத்தினருக்கு சாா்ந்தோா் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 20,739 வழங்க தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் உத்தரவிட்டது. எனவே திருச்சி இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளா் எஸ். ரேவதி, தனியாா் நிறுவன தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ராஜு ஆகியோா் இறந்த தொழிலாளியின் குடும்பத்தினரிடம், இஎஸ்ஐ மண்டல இணை இயக்குநா் வழங்கிய சாா்ந்தோா் உதவித் தொகை ஆணையை சனிக்கிழமை அளித்தனா்.

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT