திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்து மூவா் காயமடைந்தனா்.
திருச்சி கீழசிந்தாமணியை சோ்ந்தவா் மு. சக்திவேல் (58). இவா் தனது மனைவி சந்தானலட்சுமி (50), மகள் புவனேஸ்வரி (22) ஆகியோருடன் தனது காரில் மதுரைக்கு சனிக்கிழமை புறப்பட்டாா்.
காா் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி பிரிவு அருகே சென்றபோது சாலையின் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இதில் காரிலிருந்த மூவரும் காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.