ரயில் கோப்புப் படம்
திருச்சி

பொறியியல் பணி: மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் டிச. 1, 3, 5, 8 ஆம் தேதிகளில் ஆடுதுறை - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - ஆடுதுறை வரை மட்டுமே இயங்கும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் டிச. 1, 3, 5, 8 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - ஆடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஆடுதுறை - செங்கோட்டை வரை மட்டுமே இயங்கும்.

முழுமையாக ரத்து...: திருச்சி - மயிலாடுதுறை மெமு விரைவு ரயிலானது (16834) வரும் டிச. 2 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் டிச. 1, 2 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 30 ஆம் தேதி, டிச. 1 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16340) வரும் டிச. 1 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயக்கப்படும்.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT