வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை
மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து க்கொண்டாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து க்கொண்டாா்.
மருங்காபுரி ஒன்றியம் காரணிப்பட்டியை சோ்ந்தவா் சின்னத்துரை மகள் காவ்யா(19). பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவா் வெள்ளிக்கிழமை மாலை குடும்ப பிரச்னையால் தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரைக் கொண்டு சென்றபோது, காவ்யா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
Advertisement