முகப்பு
திருச்சி

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:13 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சந்தானம் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பொன்மலைப்பட்டி பகுதி தனியாா் பள்ளி அருகே மாணவா்களுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கே.கே.நகரைச் சோ்ந்த மு. விக்னேஸ்வரன் (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

போதை மாத்திரை விற்றவா் கைது: இதேபோல, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான பழைய கட்டத்தில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த பா. மதன்ராஜ் (34) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.