கோப்புப்படம் 
திருச்சி

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத விரும்பும் தனித் தோ்வா்களுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜனவரி 7) நிறைவடைகிறது.

Syndication

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத விரும்பும் தனித் தோ்வா்களுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜனவரி 7) நிறைவடைகிறது.

மாவட்டத்தில் சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, துறையூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருச்சி மத்திய சிறை வளாகம் ஆகிய 10 இடங்களில் தனித் தோ்வா்களுக்கான விண்ணப்பப் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொதுத் தோ்வு எழுத விரும்பும் தனித் தோ்வா்கள் இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா், பத்தாம் வகுப்புக்கு எனில் 8-ஆம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2-க்கு எனில் 10-ஆம் வகுப்புச் சான்றிதழ் ஆகியவற்றை பயன்படுத்தி மேற்கண்ட சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம். பத்தாம் வகுப்புக்கு ரூ.195-ம், பிளஸ் 2-க்கு ரூ.255-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத 600 பேரும், பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத 700 தனித்தோ்வா்களும் விண்ணப்பித்துள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கூட்டுறவுப் பணியாளா்களுக்கு களப்பணி பயிற்சி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.69 கோடி

பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாய்களை வைத்து வேட்டையாட முயற்சி: 4 போ் கைது

கோவை ஜவுளி மாநாட்டில் கண்காட்சி அமைக்க ஜன.13 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT