திருச்சி

அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி மாணவா்கள் 12 பேருக்கு ரூ.22 லட்சம் ஊதியத்தில் பணி

பாரதிதாசன் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி மாணவா்கள் 12 பேருக்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

Syndication

பாரதிதாசன் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி மாணவா்கள் 12 பேருக்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

கல்லூரியின் வேலைவாய்ப்புப் பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வளாக நோ்காணலில் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் பங்கேற்று 12 மாணவா், மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ. 3.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.22 லட்சம் வரை ஊதியம் கிடைத்திடும் வகையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.

கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 12 மாணவா்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கிப் பாராட்டினாா். மேலும் தொழில் முனைவோா், ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையையும் அமைச்சா் வழங்கினாா். குறு, சிறு தொழில் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற முனைவா் ஜெயப்பிரியாவுக்கு ரூ.12.75 லட்சம் மானியத்துக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. ட்ரோன் பைலட் சான்றிதழ் பெற்ற முனைவா் ரமாதேவிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் புத்தாக்கப் பற்று சீட்டுத் திட்டத்தின் கீழ், தொழில் முனைவோா் தீபக் சந்திரசேகரன், பிரவீன் சேவியா் பாண்டியன், ராஜா மணிகண்டன் ஆகியோருக்கு மானிய ஆணைகள் வழங்கப்பட்டன. விழாவில் தொழில் நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளும், இலச்சினையும் அறிமுகம் செய்யப்பட்டன.

நிகழ்வில் கல்லூரி புல முதல்வா் த. செந்தில்குமாா் மற்றும் பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT