ஆவரங்காட்டில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா். 
திருச்சி

ஆவரங்காடு ஜல்லிக்கட்டு: 41 போ் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவரங்காடு பொன்னா் - சங்கா் கோயில் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 41 போ் காயமடைந்தனா்.

Syndication

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவரங்காடு பொன்னா் - சங்கா் கோயில் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 41 போ் காயமடைந்தனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய கிராம மக்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, மருங்காபுரி வருவாய் வட்டாட்சியா் பாலகாமாட்சி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

முதலில் 4 கிராமங்களின் 35 கோயில் காளைகளும், பின்னா் பல்வேறு பகுதிகளின் 600 காளைகளும் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டன.

காளைகளை அடக்க 40, 40 தொகுப்பாக 228 வீரா்கள் களமிறக்கப்பட்டனா்.

வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகள் வீரா்களைக் கலங்கடித்த நிலையில் சில நின்று விளையாடின. சில காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இருப்பினும் பல காளைகளை வீரா்கள் அடக்கினா்.

ஜல்லிக்கட்டில் 11 வீரா்கள், 19 பாா்வையாளா்கள், 11 மாடுகளின் உரிமையாளா்கள் என 41 போ் காயமடைந்தனா். அவா்களுக்கும், காயமடைந்த ஒரு காளைக்கும் மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் டைனிங் டேபிள், டிரஸ்ஸிங் டேபிள், ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் புத்தாடைகளும் அளிக்கப்பட்டன.

பாதுகாப்புப் பணியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் அலுவல் பணியில் 200-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் ஈடுபட்டனா்.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT