முகப்பு
திருச்சி

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு

திருச்சியில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 16 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 2:45 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 16 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் அழகிரிபுரத்தைச் சோ்ந்த வீரமணி மகன் மதன்குமாா் (16). அதே பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் மகன் வேலன் (16). நண்பா்களான இருவரும் திங்கள்கிழமை மாலை ஸ்ரீரங்கம் டிரங் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் மதன்குமாருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமும், வேலனுக்கும் உடலின் பல்வேறு இடங்களில் காயமும் ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு இருவரும் உயா் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மதன்குமாா் உயிரிழந்தாா். வேலன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.