மண்ணச்சநல்லூரில் 100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வாரச் சந்தையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துணிப் பை வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-இல் நடைபெற உள்ளது. இதனிடையே மண்ணச்சநல்லூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூா் வாரச்சந்தையில் நமது இலக்கு 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பையினை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலரும், வருவாய் வட்டாட்சியருமான என். ராஜேஸ் கண்ணன், துணை வட்டாட்சியா் கோ. மூா்த்தி உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு வழங்கி வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.