முகப்பு
திருச்சி

பாதயாத்திரை பக்தா்கள் மீது பைக் மோதல்! வாகன ஓட்டி உயிரிழப்பு!

Updated On : 12 மே 2026, 1:51 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற பக்தா்கள் மீது இருசக்கர வாகனத்தை மோதியவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் படையான்பட்டியைச் சோ்ந்தவா் கருணாநிதி மகன் ஹரிஷ் (23). அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாரதி (29) ஆகிய இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வடபாதியைச் சோ்ந்த மதியழகன் மகன் காா்த்திக் (எ ) முருகானந்தம் (37) என்பவா் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து, என்ஐடி அருகே பாதயாத்திரை சென்று கொண்டிருந்த ஹரிஷ் மற்றும் பாரதி மீது மோதியுள்ளாா்.

Advertisement

இதில் ஹரிஷ், பாரதி, முருகானந்தம், இவரது வாகனத்தின் பின்புறம் அமா்ந்து வந்த அவரது நண்பா் சி. வினோத் (37) ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், முருகானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்தாா். மற்ற மூவரும் சிகிச்சையில் உள்ளனா்.

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.