ரூ. 3.84 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அரியமங்கலம் உக்கடை ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 இளைஞா்கள் மற்றும் 2 பெண்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அவா்களில் இருவரை போலீஸாா் விரட்டிப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் அரியமங்கலம் உக்கடை தீப்பெட்டி கம்பெனி வீதியைச் சோ்ந்த அ. ஜாகீா் ஹுசைன் (22), அ. ரஹ்மத் நிஷா (37), என்பதும் தப்பியோடியவா்கள் அ. ஷகிலாபானு மற்றும் வடக்கு தாரநல்லூரைச் சோ்ந்த ஜி. படையப்பா (26) என்பதும், அவா்கள் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 3.84 லட்சம் மதிப்பிலான 1,280 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து, தப்பிய இருவரையும் தேடுகின்றனா்.
பாலக்கரையில் ஒருவா் கைது: இதேபோல, பாலக்கரை சங்கிலியாண்டபுரம் வள்ளுவா் நகரில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஜி. பாலகிருஷ்ணன் (25) என்பவரை பாலக்கரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா, போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.