அரியலூர்

கல்யாணசுந்தர கணபதி கோயில் கும்பாபிஷேகம்

DIN

அரியலூர் மாவட்டம் வாரணவாசியிலுள்ள கல்யாண சுந்தர கணபதி, வலம்புரி கற்பக விநாயகர், விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர், சண்டிகேஸ்வரர், தட்சணாமூர்த்தி ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பிஷேகத்தையொட்டி, கடந்த 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் தேவ அனுக்ஞை, விநாயகர் வழிபாடு உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் தீபாதாரனை நடைபெற்றது.
தொடர்ந்து வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மேல் மங்கல இசை ஐந்துகரத்தான் வழிபாடு உள்ளிட்ட  பூஜைகள் நடைபெற்று, வேதமந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் கல்யாணசுந்தர கணபதி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தீபாதாரனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT