முகப்பு
அரியலூர்

வார்டு மறுவரையறை வரைவு கருத்துருஊக்கள் வெளியீடு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை வரைவு கருத்துருக்களை மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை வரைவு கருத்துருக்களை மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு அரியலூர்  மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகள், 113 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 12 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளிட்டவை வார்டு மறுவரையறை கருத்துருக்கள் தயார் செய்யப்பட்டதை சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு மறுவரையறையின் மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துபூர்வமாக சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ ஜன.2 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →