அரியலூர்

அன்னிமங்கலத்தில் 1,790 கால்நடைகளுக்கு இலவசச் சிகிச்சை

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு துறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில் 1790 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
 கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் நசீர் தலைமை வகித்து  தொடக்கி வைத்தார். உதவி இயக்குநர் கரிகால்சோழன் முன்னிலை வகித்தார்.
முகாமுக்கு கொண்டு  வரப்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் மணிகண்டன், செந்தாமரை ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், மலடு நீக்கம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
முகாமில் 360 பசுக்கள், 2 எருமைகள், செம்மறி ஆடுகள், 400 வெள்ளாடுகள், 980 கோழிகள்,3 நாய்கள் என மொத்தம் 1,790 கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT