அரியலூர்

அழகியமணவாளம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த அழகியமணவாளம் கிராமத்திலுள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாஷேகத்தை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி கொள்ளிட ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, நான்கு கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் சோமகுடும்ப பூஜை, வேதிகா பூஜை, கோ பூஜை, மகாலட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு 10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று, விமானத்திலுள்ள கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், காமாட்சியம்மன், பொம்மியம்மன், வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன், கருப்பசாமி உள்ளிட்ட சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோயில்களிலுள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT