அரியலூர்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டண நிலுவைத் வசூல் என்ற பெயரில் கேபிள் ஆபரேட்டர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசு கேபிள் நிறுவனத்தில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி ஆபரேட்டர்களுக்கு நேரடியாக இணைப்பு வழங்கப்பட வேண்டும். தட வாடகை ரத்து செய்ய வேண்டும். கேபிள் ஆபரேட்டர்களுக்கு நல வாரியம்,தொழில் பாதுகாப்புக்கான காப்பீடு,வங்கிக் கடன் உதவிகளை செய்துதர வேண்டும்.
பணியின் போது உயிரிழந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க
 வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT