திருமானூரில் விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம், திருமானூரில் உணவு வீணாக்குதல் மற்றும் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூர்திருமானூரில் விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம், திருமானூரில் உணவு வீணாக்குதல் மற்றும் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், திருமானூரில் உணவு வீணாக்குதல் மற்றும் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் இந்த முகாமை நடத்தினர்.
இந்த நிகழ்வுக்கு திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை இன்பராணி தலைமை வகித்து, எவ்வாறெல்லாம் உணவு வீணாகிறது, அதை தடுக்க வேண்டிய முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை மாணவிகள் துவாரகா,அகிலா,பவதாரணி,நந்தினி, ஹெமினா, ஜஸ்வர்யா,கௌசல்யா,அங்கவை, திவ்யாபாரதி,ராஜபுவனி ஆகியோர் செய்திருந்தனர்.