அரியலூர்

போதிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லை

DIN

டெங்குவைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றார் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்று மருத்துவமனையைத் திறந்து வைத்து மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் தற்போது  நிலவேம்புக் கசாயமும், பப்பாளி இலையுமே மக்களைக் காப்பாற்றி வருகிறதே தவிர, டெங்குவைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. டெங்கு மட்டுமன்றி, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் நிறைய உள்ளன.  அவற்றைத் தீர்க்கும் மனப்பான்மை தமிழக அரசிடம் இல்லாதது வருத்தத்துக்குரியது. அனைத்து சாதியினரும் கோயிலில் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் கேட்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.  
தமிழகத்தில் பயிற்சிபெற்ற அர்ச்சகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்,  அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
நீட் தேர்வை எதிர்த்து, திராவிடர் கழகம் அதனுடன் ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில், பெரியார் கல்விக் குழுமத் தலைவர் அன்புமணி, மருத்துவ குழும இயக்குநர் கவுதமன், திராவிடர் கழக மண்டல தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ரூ. 5 லட்சம் நன்கொடையை விருத்தாசலம் நகைக்கடை அதிபர் அகர்சந்த் கி.வீரமணியிடம் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT