அரியலூர்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: அரியலூரில் உண்ணாவிரதம்

DIN

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் அண்ணாசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தினர் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், நீட் தேர்வுக்கான சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், கல்வியை மாநில அதிகார பட்டியலில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜெயகுமார் தலைமை வகித்தார். தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலர் அன்பானந்தன், தேர்தல் பிரிவு மாநில துணைச் செயலர் தனக்கோடி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் சுதாகர் பங்கேற்று பேசினர்.
மாநிலச் செயலர் நீதிவள்ளல் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT