அரியலூர்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

DIN

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள உடையவர்தீயனூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 
இவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால், முறையாகக் குடிநீரும், மின்சாரமும் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஸ்ரீபுரந்தான் - அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற உடையார்பாளையம் போலீஸார் மற்றும் மின்சார வாரிய அலுவலர் அன்பழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT