அரியலூர்

பருத்தி பாதிப்பு: விஷம் குடித்த விவசாயி சாவு

DIN


அரியலூர் மாவட்டம், கீழ எசனைப் பகுதியில் காட்டுஓடையில் பெருக்கெடுத்த மழை நீரால் பருத்திப் பயிர் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விஷம் குடித்த விவசாயி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், கீழ எசனை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் (40). தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டிருந்தார். மானாவாரிப் பயிரான பருத்திக்குத் தேவையான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றிருந்த நிலையில், அண்மையில் பெய்த மழையின் காரணமாக காட்டு ஓடையில் ஏற்பட்ட தண்ணீர் பெருக்கெடுத்து ராமர் வயல்பகுதியில் சென்றதால் பருத்தி முழுவதும் பாதிக்கப்பட்டது.
இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராமர், கடந்த 23 ஆம் தேதி வீட்டிலிருந்த விஷமருந்தை குடித்து, ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து பல நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT