பைக்குகள் மோதல்: 2 பேர் பலத்த காயம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்காரசு மகன் பிரபு (36). தனது சொந்த வேலைக்காக அங்குள்ள கடைவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே பகுதியைச் சேர்ந்த முத்தையன் மகன் ராமசாமி (58) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், பிரபு ஓட்டி வந்த வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. இதில், 2 பேரும் பலத்த காயமடைந்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.