முகப்பு
அரியலூர்

கல்லாத்தூர் சுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர் கிராமத்திலுள்ள  ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீபழனியாண்டவர் , ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத

Updated On : 21 மே, 2018 at 7:17 AM
பகிர்:

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர் கிராமத்திலுள்ள  ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீபழனியாண்டவர் , ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி முதல் வேள்வி, கலச வழிபாடு, 19 ஆம் தேதி திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி,திருமுறை பாராயணம், ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால வேள்வி, யாத்ர தானம் ஆகியவை நடத்தப்பட்டு, பின்னர் கோயில் கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்  நடத்தினர். கும்பாபிஷேகத்தை காண கல்லாத்தூர், தண்டலை, சின்னவளையம், செங்குந்தபுரம், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.