அரியலூர்

வயலில் இறங்கிய அரசுப் பேருந்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்

DIN


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து வயலில் இறங்கியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
திருமானூர் அருகேயுள்ள தூத்தூர் கிராமத்தில் இருந்து காமரசவல்லி கிராமம் வழியே தஞ்சாவூருக்கு 42 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை ராஜ்குமார் ஓட்டிவந்தார். காமரசவல்லி கிராமத்துக்குச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்குள்ள வயலில் இறங்கி மரத்தில் மோதி நின்றது. இதில் பேருந்தில் பயணம் செய்த தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (19), ஷீலா (17), சந்தோஷ் (19) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு அரியலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT