அரியலூர்

அரியலூர் பால தண்டாயுதபாணி கோயிலில் சூரசம்ஹாரம்

DIN

அரியலூர் -  பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 8-ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு பஜனை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, 12.30 மணி முதல் மாலை 2 மணி வரை நாதஸ்வர கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
மாலை 4 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்துக்கு ஆட்டு கிடா வாகனத்தில் எழுந்தருளி வந்த முருகப்பெருமான், கஜமுக சூரன், ஆடுதலைசூரன், சிங்கமுக சூரன், தரகா சூரன், பத்ம சூரன், மயூரா சூரன், சூர பத்மன் என ஏழு உருவங்களைத் தாங்கி வந்த சூரனை மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் செய்தார். 
தொடர்ந்து,  6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT