அரியலூர்

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 150 பேருக்கு ரூ.1 கோடி கடன் வழங்கல்

DIN

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடன் மேளாவில்,150 பேருக்கு ரூ.1 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  
கடன் மேளாவில் ஆட்சியர் மு. விஜயலட்சுமி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கினார். மேலும் இந்த முகாமில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பெற்றுக்கொண்டார். இப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சிகள், 5,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
இதில் சுமார் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் சுயதொழில் செய்து வருகின்றனர். மேலும் இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் தங்களின் தொழிலை மேம்படுத்துவதற்காக சுமார் 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிகள் மூலம் சுமார் ரூ.1 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வெங்கிடாசலம்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் ஜான்வெட், அரியலூர் கிளை மேலாளர் இளஞ்சேரன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் சகுந்தலா, சென்னை கதர் கிராம வாரிய உதவி இயக்குநர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT