அரியலூர்

5 அரசுப் பள்ளிகளுக்கு கல்விச் சீர்வரிசைகள்

DIN

அரியலூர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளுக்கு கிராம மக்கள் வியாழக்கிழமை கல்வி சீர் வரிசைகளை வழங்கினர்.
திருமானூர் அருகேயுள்ள விழுப்பனங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலி உள்ளிட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை கிராம பொதுமக்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். 
அதே போல், கரைவெட்டி பரதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை அக்கிராம மக்கள் பள்ளி தலைமையாசிரியரிடம்  வழங்கினர். கள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை கிராம மக்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். மேற்கண்ட பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, சாந்திராணி,  வட்டார வளமைய மேற்பார்வையாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஜயங்கொண்டம் அருகேயுள்ள சின்னாத்துகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கீழகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அக்கிராம மக்கள் ரூ.25  ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை வழங்கினர்.  நிகழ்ச்சிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் நீலமேகம், அசோகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT