அரியலூர்

அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை

DIN

அரியலூர் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார்.
அரியலூர் ரயில்நிலையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த அவர்,  பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 
திருச்சி கோட்டத்தில் உள்ள அனைத்து லெவல் கிராசிங்களிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கான பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களின் பெட்டிகள் எங்கு நிற்கும் என்பதை அறிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நடைமேடைகளில் அமைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT