அரியலூர்

திருமானூர் அருகே  பெண் தற்கொலை: 5 பேர் மீது வழக்கு

DIN

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருமணமான 16 மாதத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்தனர்.
கீழப்பழுவூர் அடுத்த ஆண்டிபட்டாக்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் அறிவழகன் (25), இவருக்கும் திருமானூர் அருகேயுள்ள வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்  மகள் அகிலாவுக்கும் (20) கடந்த 16 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து 6 மாத பெண் குழந்தை உள்ளது. 
இந்நிலையில் குடும்ப பிரச்னையால் கடந்த 10 ஆம் தேதி அகிலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு  தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அகிலா கிசிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். 
இந்நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும்,இதற்கு காரணமான அவரது  கணவர்,மாமனார், மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முருகேசன் கீழப்பழுவூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அகிலா கணவர் அறிவழகன்,மாமனார் சிவலிங்கம்,மாமியார் அரும்பு மற்றும் உறவினர்கள் சிவக்குமார் ,பரமேஸ்வரி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் இது குறித்து கோட்டாட்சியரும் விசாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT