அரியலூர்

மேலவரப்பன்குறிச்சியில் மகா சண்டி ஹோமம்

DIN

அரியலூர் மாவட்டம் மேலவரப்பன்குறிச்சி கிராமத்தில், உலக நன்மைக்காக ஏகவுரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் விளாம்பழம், கொப்பரை தேங்காய், இலுப்பை பூ,  நார்த்தம்பழம், பூசணிக்காய், கரும்பு, மாதுளம் பழம், வில்வபழம், வாழைப்பழம், பட்டுப்புடவை, தங்கக்காசு உள்ளிட்ட ஹோம பொருள்களை கொண்டு மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
இதனால் பலமடங்கு விவசாயப் பொருள்கள் உற்பத்தியாகி நாட்டில் பஞ்சம், பசி நீங்கும் என ஐதீகம். தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிகளுக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT