அரியலூர்

கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆய்வு

DIN

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அருகேயுள்ள மறவனீஸ்வரர் கோயிலையும்  பார்வையிட்டு, அங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செந்தியாளர்களிடம் அவர் கூறுகையில்: இது சாதாரண ஆய்வு தான். எந்த ஒரு புகாரின் பேரிலும் ஆய்வு மேற்கொள்ளவில்லை. மாவட்டத்தில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள மறவனீஸ்வரர் கோயில் ஆயிரம் காலங்கள் பழைமை வாய்ந்தவை, ஆலந்துறையார் கோயில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை என்றார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வினால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT