அரியலூர்

மீன்சுருட்டி அருகே ரூ.91 ஆயிரம் பறிமுதல்

DIN


அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பறக்கும் படையினர் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டன.
மீன்சுருட்டி அருகே திருச்சி - சிதம்பரம் சாலை ராமதேவநல்லூரில் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலரும் கூட்டுறவு சார்-பதிவாளருமான சசிகுமார் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீன்சுருட்டியிலிருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த மனோகர், ரூ.91 ஆயிரத்து 850-யை உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்து உடையார்பாளையம்  கோட்டாட்சியர் ஜோதி வசம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT