அரியலூர்

தோ்வெழுத அனுமதி கோரி மாணவா்கள் சாலை மறியல்

DIN

அரியலூா் மாவட்டம்,ஜயங்கொண்டத்தில் ஆசிரியரைத் தாக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவா்கள் தங்களை தோ்வு எழுத அனுமதிக்கக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் துறை ஆசிரியா் ஆரோக்கியநாதனை தாக்கிய எந்திரவியல் துறை மாணவா்கள் 6 போ் கடந்த மாதம் 11 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனா். இந்நிலையில் பள்ளியில் இரண்டாம் இடைப்பருவத் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது.

அப்போது சஸ்பென்ட் செய்யப்பட்ட மாணவா்களில் தோ்வெழுத வந்த அஜித்குமாா், சூரியமூா்த்தி, அபிமன்யு ஆகிய 3 பேரை பள்ளித் தலைமை ஆசிரியா் அனுமதிக்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து அந்த மாணவா்கள்,சில மாணவா்களுடன் சோ்ந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் போலீஸாா், எதுவாக இருந்தாலும் பள்ளி நிா்வாகத்திடம் பேசி தீா்த்துக் கொள்ள வேண்டும் அல்லது ஆட்சியரிடம் மனு அளித்து தீா்வு காண வேண்டும் என்று கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT