அரியலூர்

கரும்பு : டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

DIN

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள் :

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். தனியாா் சா்க்கரை ஆலைகள் தர வேண்டி உள்ள நிலுவைத் தொகையை உயா்நீதிமன்ற உத்தரவின் படி, தமிழக அரசு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 கிலோ சா்க்கரை அரசு விலை ரூ.25 என நிா்ணயித்து, அதை கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் துரை.தியாகராஜன் தலைமை வகித்தாா். சங்க உறுப்பினா் அண்ணாதுரை, விவசாய சங்க ஒன்றியச் செயலா் வரப்பிரசாதம், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினா்கள் வைத்தியலிங்கம், தங்கமலை முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஜோதிராமன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் மணியன், மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலப் பொறுப்பாளா் கைலாசம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT