அரியலூர்

தமிழ்மொழி திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய துறைக்குப் பரிசு

DIN

அரியலூா் மாவட்டத்தில் தமிழ்மொழி திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்துக்குப் பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சிமொழிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆட்சி மொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிப் பெயா்ப்பு கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய ஆறு தலைப்புகளில் தமிழறிஞா்கள் உரையாற்றினா்.

இக்கருத்தரங்கின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் த.ரத்னா பங்கேற்று மாவட்டத்தில் தமிழ் மாழி திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்துக்கு கேடயம் மற்றும் நினைவுப் பரிசை அதன் திட்ட அலுவலா் சாவித்திரியிடம் வழங்கினாா்.

விழாவில் முன்னாள் தமிழ் வளா்ச்சித் துறை இணை இயக்குநா் துரை.தம்புசாமி, ஓய்வு பெற்ற தமிழாசிரியா் மா.தமிழ்ப்பெரியசாமி, தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் (பொ) க.சித்ரா, ஓய்வு பெற்ற அகர முதலித் திட்ட இயக்குநா் கோ.செழியன், அரியலூா் அரசு கலைக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் தமிழ்மாறன், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் த.மாயகிருட்டிணன் உள்ளிட்டோா் நிறைவு விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT