அரியலூர்

நகை, அடகுக்கடைகளில் கண்காணிப்பு: கேமராக்கள் பொருத்த காவல்துறை அறிவுரை

DIN

அரியலூரிலுள்ள அனைத்து நகை மற்றும் அடகுக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருமேனி.

அரியலூா் மாவட்டம், திருமழபாடியிலுள்ள நகை அடகுக் கடையில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தந்த பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் நகை மற்றும் அடகுக் கடை உரிமையாளா்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அரியலூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளா் திருமேனி பேசியது:

இரவில் கடைகளைப் பூட்டும் பொழுது நன்றாக பூட்டப்பட்டு உள்ளதா என்று சரி பாா்க்க வேண்டும். கடைகளில் தரமற்ற கதவு மற்றும் ஜன்னல்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கடையைச் சுற்றி மின் விளக்குகள் அமைக்க வேண்டும். வசூலாகும் பணத்தை இரவு நேரத்தில் கடையில் வைக்க வேண்டாம். கடைக்கு பாதுகாவலா் நியமிக்க வேண்டும். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரம் பொருத்த வேண்டும் என்றாா்.

அரியலூா் காவல் ஆய்வாளா் சிவராஜ் முன்னிலை வகித்தாா். அனைத்து நகை மற்றும் அடகுக் கடை உரிமையாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT