அரியலூர்

பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணா்வுக் கூட்டத்தின்போது, காவல் நிலைய ஆய்வாளா் செல்வராஜ் தலைமை வகித்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடக்கப் போவதாக தெரியவந்தாலோ அல்லது நடந்தாலோ அது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

மேலும் அவா் குழந்தைகள் கல்வி இடைநிற்றல், பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல், குழந்தை தொழிலாளா்களை மீட்டெடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் உள்ளிட்டவைகளுக்கான சட்டங்கள் குறித்து விளக்கினாா். இக்கூட்டத்தில், கொலையனூரைச் சோ்ந்த கங்கா மகளிா் சுய உதவிக்குழுவினா்,துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT