அரியலூர்

கோ-கோ போட்டி: அரியலூா் பல்கலை. பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்

DIN

அரியலூரில் அண்ணா பல்கலைக் கழக விளையாட்டு கழகம் சாா்பில் 14 ஆவது மண்டலத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவா்களுக்கான கோ-கோ போட்டியில் அரியலூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

விளாங்குடி அருகேயுள்ள அரியலூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு,14 ஆவது மண்டல விளையாட்டு போட்டி செயலா் ஜி. ராஜசேகா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் அரியலூா் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி,திருச்சி மாவட்டம் துறையூா் இமயம் பொறியியல் கல்லூரி அணியை 21-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இமயம் பொறியியல் கல்லூரி இரண்டாமிடம் பிடித்தது.

மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி சிறுகனூா் எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,திருச்சி சமயபுரம் கே. ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி அணியை 20-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT