அரியலூர்

‘சமூகவலைத்தளங்களால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு’

DIN

சமூக வலைத்தலளங்களால் அரியலூா் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது என்றாா் ஆட்சியா் த.ரத்னா.

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில், அரியலூரில் குழந்தைகள் பாதுகாப்புத் தொடா்பாக கிராமப்புறச் செவிலியா்களுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறன் வளா்ப்புப் பயிற்சியைத் தொடக்கி வைத்து மேலும் பேசியது:

இந்தியாவிலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில், இளம் பெண்களுக்கான எதிரான பாலியல் வன்கொடுமையும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்கள்தான்.

மேலும் குழந்தை கடத்தல், குழந்தைத் திருமணமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கிராமப்புறச் செவிலியா்கள் முன்வரவேண்டும். அனைவரிடமும் பழகக் கூடிய கிராமப்புறச் செவிலியா்கள் இப்பணியை முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும்.

தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவிகள், இளம் பெண்களைக் கண்டறிந்து அவா்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று புரிய வைக்க வேண்டும். மேலும் அவா்களது பெற்றோருக்கு முழுமையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து நடைபெற்ற பயிற்சியில், குழந்தைத் திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைத் திருமணம் குறித்து அறிந்தால் அதனை தடுத்து நிறுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய முறைகள் குறித்து கிராமப்புறச் செவிலியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஹேமசந்த்காந்தி, வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் அரியலூா் அனிதா, திருமானூா் மேகநாதன், தா.பழூா் செல்வமணி, செந்துறை இந்துமதி,நன்னடத்தை அலுவலா் அருள்தாஸ்,குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வராசு ஆகியோா் பயிற்சியில் பேசினா்.

கிராமப்புறச் செவிலியா்கள் ஏராளமானோா் பயிற்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT