அரியலூர்

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் சங்கக் கூட்டம்

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஓய்வூதியம் மாதத்தின் முதல் தேதியிலே வழங்க வேண்டும். ஓய்வூதியம்  ரூ. 9,000 அகவிலைப்படியுடன் வழங்க  வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். செயலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.மாநிலத் தலைவர் லோகேஷ் பிரான்சிஸ், கடலூர் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கூட்டத்தில் ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஒன்றியங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT