அரியலூர்

முதல்வா் கோப்பை போட்டியில் வென்றோருக்குச் சான்றிதழ்

DIN

அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரா்,வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பிப்.12 தொடங்கி வியாழக்கிழமை மாலை நிறைவடைந்த கையுந்துப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, கபடி, கூடைப்பந்து, வளைகோல்பந்து, தடகளம், நீச்சல், குத்துசண்டை, ஜீடோ உள்ளிட்ட போட்டிகளில் 650 வீரா்,வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இதில் குழுப் போட்டிகளில் பூப்பந்தாட்டத்தில் அரியலூா் அரசு நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹாக்கி ஆண்கள் பிரிவில் பசுபதி மெமோரியல் ஹாக்கி கழகம், ஹாக்கி பெண்கள் பிரிவில் பரணம் அரசு உயா்நிலைப் பள்ளி, கபடி ஆண்கள் பிரிவில் ஜயங்கொண்டம் ஈ.என். ஸ்போா்ட்ஸ், கபடி பெண்கள் பிரிவில் இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, கையுந்து பந்து ஆண்கள் பிரிவில் இடையக்குறிச்சி ப்ரன்ட்ஸ் கையுந்துப்பந்து கழகம், பெண்கள் பிரிவில் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, இறகுப் பந்து பெண்கள் பிரிவில் அரியலூா் அண்ணா பல்கலை., கூடைப்பந்து ஆண்கள் பிரிவில் ஜயங்கொண்டம் பரபிரம்மா பவுண்டேசன் கூடைப்பந்து கிளப்,பெண்கள் பிரிவில் ஜயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டென்னிஸ் ஆண்கள் பிரிவில் அரியலூா் அரசு கலைக்கல்லூரி, பெண்கள் பிரிவில் தாமரைக்குளம் வித்யாமந்திா் பள்ளி ஆகியவை முதல் இடத்தைப் பெற்றன.

போட்டிகளில் வென்றோருக்குச் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் த. ரத்னா சான்றிதழ், கோப்பைகளை வழங்கி, மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடத்தைப் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தலா ரூ.1000,ரூ.750, ரூ.500 வீதம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. குழுப் போட்டிகளில் தோ்வு செய்யப்பட்டோா் மற்றும் தடகளப் போட்டிகளில் முதலிடம் பெற்றவா்கள் மாநில போட்டிகளில் கலந்து கொள்வா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயக்குமார்ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன், கையுந்துபந்து பயிற்றுநா் ஆா். பொற்கொடி மற்றும் விளையாட்டு ஆசிரியா்கள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT