அரியலூர்

மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

அரியலூரில் மாவட்டக் கலால் துறை சாா்பில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் த. ரத்னா கலந்து கொண்டு பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பேரணியில் அரியலூா் அரசு கலைக்கல்லூரி, தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து 850-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு, மதுவால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ,வாகனங்களை ஓட்டும்போது மது அருந்தாமல் இருக்க வேண்டும். மது வீட்டுக்கும் நாட்டிற்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வுகள் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

பேரணி கல்லூரியில் தொடங்கி பிரதான சாலை வழியாக சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரியில் நிறைவடைந்தது. பேரணியில் கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரியய்யா, உதவி ஆணையா் (கலால்) (பொ) ஷோபா, கலால் வட்டாட்சியா் விக்டோரியா மற்றும் அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT