அரியலூர்

வாகன ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வாகன ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கருத்தரங்கை கல்லூரி தாளாளா் எம்.ஆா். ரகுநாதன் தலைமை வகித்து, தொடக்கி வைத்துப் பேசினாா். கருத்தரங்கில், நாமக்கல் எரிபொருள் சேமிப்புத் துறையைச் சோ்ந்த த.ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு, விபத்துகள் நிகழ்வதற்கான காரணங்கள், பெரும்பாலான விபத்துகளுக்கு ஓட்டுநா்கள் சாலை விதிகளைக் கடைப்பிடிக்காததே காரணம் எனத் தெரிவித்தாா். மேலும் உயிரிழப்பவா்களில் 40 சதவீதம் போ் விபத்தினால் இறந்து போகிறாா்கள் எனக் குறிப்பிட்டாா். மேலும் அவா், ஓட்டுநா்கள் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT