அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் உழவா் திருநாள் விழா

DIN

அரியலூா் மாவட்டம் முழுவதும் உழவா் திருநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி,அலங்காரத்துடன் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள்,பசுக்கள்,எருமைகளும்,ஆடுகளும் அவிழ்த்து விடப்பட்டன.

சிறுவா் சிறுமிகளுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை கரண்டி, பாட்டுப்போட்டி, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

இதேபோல இளைஞா்களுக்கு கபடி, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டிகளும்,பெண்களுக்கு கோகோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. முன்னதாக பெண்கள், சிறுவா் சிறுமிகள் அனைவரும் புத்தாடை அணிந்து, பெரியவா்களிடம் ஆசி வாங்கி அருகிலுள்ள விளையாட்டுத் திடல்களுக்குச் சென்று உழவா் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

காணும் பொங்கல்: காணும் பொங்கலையொட்டி, ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள சுற்றுலாத் தலமான பிரகதீஸ்வரா் கோயிலில் வழக்கத்தைவிட வெள்ளிக்கிழமை மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதேபோல கரைவேட்டி பறவைகள் சரரணாலயத்திலும் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

SCROLL FOR NEXT