அரியலூர்

பள்ளி, மாணவா்களுடன்பிரதமா் மோடியின் உரை

DIN

தில்லியில் பிரதமா் மோடி, மாணவா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை பள்ளி மாணவிகள் நேரலையில் கண்டுகளித்தனா்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள், பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்களுடன் ‘பரீக்ஷா பே சா்ச்சா’ என்ற பெயரில் கலந்துரையாடும் நிகழ்ச்சியை பிரதமா் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கினாா்.

3 ஆம் ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி தில்லி தல்கத்தோரா மைதானத்தில் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது, தோ்வு சமயத்தில் மாணவா்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது குறித்து விளக்கினாா். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை, அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி சிறப்பு திரை மூலம் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. பிரதமா் மோடி ஹிந்தியில் பேசியதை மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆசிரியா்கள் விளக்கிக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT